தஞ்சாவூர், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996 ஆம் ஆண்டு ப்ளஸ்-டூ பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணா நிதி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் மெய்ச் சுடர் நா.வெங்கடேசன் வர வேற்றார். பேராசிரியர் கணேசகுமார் தொகுப்புரை ஆற்றினார். பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் கே.மெய்ஞான மூர்த்தி, ஆர்.சந்திரசேகரன், தங்கராசு, இரா.சின்னத் துரை, வி.வைரவ சுந்தரம், ப.இந்திராதேவி ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து மாணவர்களை வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாணவர்க ளான காவேரி தனிப்பயிற்சி கல்வி மைய நிறுவனர் எஸ்.கௌதமன், செய்தியாளர் மற்றும் வர்த்தக சங்கப் பொ ருளாளர் எஸ்.ஜகுபர்அலி, தமிழாசிரியை ஜீவா ஆகி யோர் பேசினர். முன்னாள் மாணவரும் தற்போதைய ஆசிரியருமான சற்குணம் நன்றி கூறினார். விழாவில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து அஜ்மல் கான், கலா நாதன் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் 40 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து ஒரு குழு அமைத்து பள்ளி வளர்ச்சி க்கு தேவையான உதவி களை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.