tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 70 பேருக்கு, ரூ 1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில், ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா, ஆட்டோ சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.