tamilnadu

img

தடுப்பு உபகரணங்கள் வழங்குக!

அங்கன்வாடி  ஊழியர்கள்  கோரிக்கை

          சென்னை,ஏப்.15- கொரோனா தடுப்பு பணிகளைச்  செய்து வரும் அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் - தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  பொதுச் செயலாளர் டெய்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு:

     கொரானா நோய்த்தொற்றை எதிர்த்து நமது நாடே போராடிக் கொண்டி ருக்கும் இவ்வேளையில் பல துறைகளு டன் நமது அங்கன்வாடி பணியாளர்க ளையும் பொது நலன் கருதி உதவி செய்ய அழைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு பணியைச் செய்ய அங்கன்வாடி பணியாளர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் முன் வைக்கும் கோரிக்கைகள்:

கொரானா தடுப்பு பணியில் ஈடு பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் சுகா தாரத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் போலவே சமூக நலத்துறை பணி யாளர்களான அங்கன்வாடி பணியா ளர்களாகிய எங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழியர்கள்  மற்றும் அவர்களின் குடும்பத்தா ருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட  வேண்டும்.   மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருப்பதைப்போல காப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த நோய்த்தொற்று நமது நாட்டை விட்டு அகலும் வரை நமது ஊழி யர்களை வைத்து குடிடடடிற ருஞ செய்யும் படி நிச்சயம் பணி செய்ய வேண்டியது இருக்கும். மேலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாத சூழலில் இரு சக்கர வாகனத்தில் நமது சீருடை  அணிந்து சென்றாலும் அவருக்கு அனு மதி பாஸ் அளித்திட வேண்டும். வாகனம்  ஓட்டத்தெரியாத பணியாளர்களுடன் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர் கள் எவரேனும் சென்றாக வேண்டும். இந்நிலையில் அந்த வாகனத்திற்கும் அவருடன் செல்பவருக்கும் அனுமதி  பாஸ் வழங்க வேண்டும். சாப்பாடு  பெட்ரோல் மற்றும் இதர செலவுகளுக்கா கச் சேர்த்து வேலை செய்யும் நாட்க ளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 500 என இன்சென்டீவ் வழங்கப்பட வேண்டும்.

பணியாளர் பணிபுரியும் மையத்தின் அருகில் உள்ள பகுதிகளை  மட்டும் கண்காணிக்கச் சொல்லுதல்  வேண்டும். ஏனெனில் போக்குவ ரத்திற்கு வாய்ப்பில்லாத நேரத்தில் கொரோனா பணி செய்ய இலகுவாக அமையும்.  கொரோனா தடுப்பு பணிக்  காகச் செல்லும் ஒவ்வொரு ஊழிய ருக்கும் தேவையான பாதுகாப்பு உப கரணங்களைக் குறைந்த பட்சம் 15  நாட்களுக்காக வழங்கப்பட வேண்டும்.  குறிப்பாக, கையுறைகள் 15, முகக்கவ சங்கள் 15, சானிடைசர் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த மாதம் ஓய்வு  பெரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வாழ்வா தாரத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் நிலைமை சரியாகி அவர்கள் வேறு பணி களுக்குச் செல்லும் வரையில் குறைந்த  பட்சம் 3 மாதங்களுக்காவது ஊதியத்தை  வழங்க ஆவண செய்ய வேண்டும்.

ஏற்கனவே தங்களின் அறிவுறுத்த லின்படி ஊழியர்களைக் கட்டாயப்ப டுத்தக்கூடாது. 50 வயதைத் தாண்டிய பணியாளர்களையும், நீரழிவு நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தை கள் வைத்திருக்கும் பணியாளர்களை அவர்களின் விருப்பமின்றி பணி செய்ய அழைக்கக்கூடாது. ஏற்கனவே  பணி செய்து கொண்டிருக்கும் ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் தற்போது பணி செய்ய ஆர்வமாக உள்ள  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்களுக்கும் இந்த இன்சென்டீவ் தொகையை உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அங்கன்வாடி பணியாளர்க ளும் உதவியாளர்களும் சம்பந்தப்பட்ட சி.டி.பி.ஓ, பிஓக்கள் உடன் இருந்து பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அறி வுறுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.