இந்திய மாணவர் சங்கம் இன்று போராட்டம்
சென்னை,ஜூன் 4- இன்று தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் (எஸ்எப்ஐ) மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கல்லூரிகளில் சுழற்சி முறையை இரத்து செய்வதற்கு எதிராகவும், ஊரடங்கு முடிவதற்குள் தனியார் பள்ளிகளில் அநியாய கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்றும், இணையதள வசதி மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறாமல் இணையவழியில் பாடங்களை நடத்தக்கூடாது. மேலும் பள்ளிகள் திறப்பது மற்றும் கற்றல், கற்பித்தல் குறித்தான தமிழக அரசின் ஆய்வுக்குழுவில் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இணைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (ஜூன் 5) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.