தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது தொடர்ந்து மேகமுட்டத்துடன் கூடிய தூறல், தொடர் மழைக்கு பிந்தைய காற்றின் அதிக ஈரப்ப தம் போன்ற காரணங்களினால் சம்பா நெல் பயிரில் தற்போது பரவலாக ஆனைக்கொம் பன் ஈயின் தாக்குதல் காணப்படுகிறது. முக்கிய மாக நீரில் மூழ்கிய நெல் பயிரில் இதன் பெருக்கம் தென்படுகிறது. ஆனைக்கொம்பன் பாதித்த இளம்பயிர் முதல் 45 நாள் வரையிலான நெல் வளர்ச்சி பருவத்தில் ஈயின் இளம்புழுக்கள் பயிரின் குருத்து பகுதிக்கு சென்று வளர்கின்ற பாகத்தை உண்பதால் இலைகள் வளராமல் வெங்காய இலைபோல் குழலாக மாறி விடும். இதனால் தூர்கள் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் யானைத்தந்தம் போன்று இருப்பதால் ஆனைக் கொம்பு எனப்படும். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்கள் வெளிவராது. காலத்தே கட்டுப் படுத்தாவிடில் அதிக மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். எனவே, கொசு போன்ற இந்த ஆனைக்கொம்பன் ஈயானது நெல் பயிரினை சுற்றி வரப்பில் காணப்படும் புல்களில் தங்கி வளரும். எனவே தேவையற்ற புல் களைகளை முதலில் அகற்ற வும். பரிந்துரைப்படி மட்டும் தழைச்சத்து உரமிடவும். பூச்சியின் தாக்குதல் அதிகமிருக்கும் பட்சத்தில் குளோர்பைரிபாஸ் 20-500 மில்லி /ஏக்கர் தயோமீத்தாக்சிம் 25 -40 கி/ ஏக்கர் அல்லது பைப்ரோனில் 5- 600 கி / ஏக்கர் மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்” என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.