tamilnadu

img

வயலில் எரிந்து கிடந்த பெட்ரோலிய குழாய்கள்   காவல்துறை விசாரணை  

தஞ்சாவூர், நவ.7- தஞ்சாவூர் அருகே வயலில் பதிப்பதற்காக வைக்கப் பட்டிருந்த பெட்ரோலிய குழாய்களுக்கு புதன்கிழமை தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்தகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதில் கூடுதல் செலவும், கால விரயமும் ஏற்படு வதைக் கருத்தில் கொண்ட எண்ணெய் நிறுவனம், பூமிக்கடியில் குழாய் பதித்து எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக நாகை மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு வரை பூமிக்க டியில் குழாய் பதிக்கப்படுகிறது. இப்பணி தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. விளைநிலங்கள் வழியாகக் குழாய் பதிக்கப்படுவதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், குருங்குளம் மேல்பாதி கிராமத்தில் பதிப்பதற்காக மின்னாத்தூர் சாலையோரம் சுமார் 40 குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன. இக்குழாய்களில் 5 குழாய்கள் புதன்கிழமை காலை எரிந்து கிடந்தன. இக்குழாய்களுக்கு யார் தீ வைத்தனர் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.