tamilnadu

img

மழையால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம், ஜன.23- தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டம் ஒன்றிய செயலா ளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் காதர்உசேன் பேசி னார். விவசாய சங்க நிர்வாகிகள் கார்த்தி, வரதராஜன், ராமதாஸ், தங்கராசு, மணிவேல், கண்ணன், சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில், டெல்டா மாவட் டத்தில் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதை உடன் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வித தடை யுமின்றி 22 சதவீதம் வரை ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும். பாபநாசம் தாலுகாவில் நத்தம், பெருங்குடி, குப்பை மேடு, பண்டாரவடை, தேவ ராயன் பேட்டை ஆகிய கிரா மங்களில் சமீபத்தில் பெய்த மழை  காரணமாக புகையான் நோய் மற்றும் நெல் பழம் நோய் கார ணங்களால் பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.