கும்பகோணம், ஜூன் 25- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக் காவேரி சிங்காரம் தெரு, துக்காம்பாளைய தெரு உட்பட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக் கடையால் ஏற்படும் பிரச்சனை களுக்கு தீர்வு காண கோரி நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெறு வதாக இருந்தது. இந்நிலையில், நகராட்சி சார்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதன் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சரி செய்வதாக அதிகாரிகள் உத்தரவாதம் தந்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் நகராட்சி பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டி யன், நகரச் செயலாளர் செந்தில்குமார், எ.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.