tamilnadu

அடிக்கடி காணாமல் போகும் அரசுப் பேருந்துகள் பொதுமக்கள் புகாரில் அதிகாரிகள் அலட்சியம்

 கும்பகோணம்,மார்ச் 17-  தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலை சுற்றியுள்ள பல கிராமம் மாணவ- மாணவிகள் பயன் பெறும் வகையில் நாச்சியார் கோ விலில் இருந்து கும்பகோணத்திற்கு திருப்பூர் மார்க்கத்தில் அரசு பேருந்து காலை 8 மணிக்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. ஆனால் அடிக்கடி எவ்வித காரணமும் இல்லாமல் பேருந்து நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் நாச்சியார் கோவிலில் இருந்து கும்பகோணம் வரும் மாணவ- மாணவிகள் ஏராள மானோர் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதியுறு கின்றனர்.  தற்போது தேர்வு காலம் என்பதால் வழக்கமான அரசு பேருந்துகள் வராமல் இருப்பது பெற்றோர்கள் மிகவும் கண்ட னத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் பள்ளி- கல்லூரி மாணவர்க ளை மற்ற விரைவு மற்றும் சாதா ரண பேருந்தில் ஏறக் கூடாது என நடத்துனர்கள் கூறி இறக்கி விடு கின்றனர். சாதாரண பேருந்துக ளும் பேருந்து நிறுத்தத்தில் நிற்கா மல் சென்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்தி ற்கு போக முடியாமல் மாணவர்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இதுகுறித்து புகார் தெரி வித்தும் போக்குவரத்து துறை அதி காரிகள் அலட்சியமாக நடந்து கொள் வதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் உரிய நேரத்தில் பேருந்தை இயக்க கோரி பெற்றோர்கள்- மாண வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.