tamilnadu

நாடு முழுவதும் நிகழும் கலவரத்துக்கு பாஜக அரசு தான் காரணம்: முத்தரசன்

தஞ்சாவூர், டிச. 22- தஞ்சாவூர் அருகே செங்கிப் பட்டியில் சனிக்கிழமை பிற்பகல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சா ரம் மேற்கொண்ட அவர் செய்தியா ளர்களிடம் தெரிவித்தது: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு நிலவு கிறது. பாஜக நாட்டு மக்களின் நலன் பற்றி கவலைப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை தீவிர மாக அமல்படுத்தி நாட்டுக்குத் துரோ கம் செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியலமை ப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ள படி போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் காவல்துறையினர் தான் வன்முறையை ஏவி மாணவர்கள் மீது பழி போடுகின்றனர். பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறாமல் காவல்துறையினர் உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்கினர். பேருந்துகளுக்குத் தீ வைத்தது மட்டுமல்லாமல், மாண வர்களின் இருசக்கர வாகனங்களை யும் அடித்து நொறுக்கினர். நாடு முழு வதும் கலவரம் ஏற்பட்டுள்ளதற்கு இதுவே காரணம். இந்த கலவரத்து க்கு பாஜக அரசு தான் முழுப் பொறுப்பு. சென்னையில் திமுக கூட்டணி டிச. 23-ஆம் தேதி பேரணி நடத்து கிறது. இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றா லும், அதையும் மீறி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது சட்டம்-  ஒழுங்குப் பாதிக்கப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல. ஆளுங் கட்சி தான் பொறுப்பு. வன்முறைக் கூடாது என நாங்களும் கூறி வருகி றோம். ஆனால் காவல் துறைதான் வன்முறை செய்கிறது என்றார் இரா. முத்தரசன்.