சென்னை,அக்.20- தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி விடு முறை தினமான ஞாயிறன்று (அக்.20)தமிழகத்தின் பல இடங்களில் தீபாவாளி விற்பனை கட்டியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் ஜவுளி, நகைகள், வீட்டு உப யோகப்பொருட்கள் வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, டவுன் ஹால், காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட வற்றை வாங்க ஏராளமான பொது மக்கள் குவிந்தவண்ணம் இருந்த னர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வர்களும் கோவையில் குவிந்த னர்.
திருச்சி
திருச்சியில் வணிக நிறு வனங்கள் நிறைந்த மெயின்கார்ட் கேட் பகுதியில் தீபாவளி விற்பனையானது. பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடை வீதி, சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, நந்திக்கோவில் தெரு, அஞ்சமன் பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் கடைகள் உள்ளன. அழகு சாதனப்பொருட்களுக்கு சிறப்பு பெற்ற பெரிய கடை வீதியில் பெண்கள் அதிகளவில் குவிந்த னர்.
நாமக்கல்
தீபாவளியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. நாமக்கல் நகர் மட்டுமின்றி மோகனூர், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், கொல்லிமலை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பொருட்களை வாங்கிச் சென்றனர். கரூரிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜவஹர் பஜார் உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் பெரிய வணிக நிறு வனங்கள் மற்றும் தரைக்கடை களில் துணிகள், வீட்டு உப யோகப்பொருட்களை பொது மக்கள் வாங்கி சென்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக சண்டே பஜாரில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான பொருட்கள் கிடைப்பதால் அங்கு கூட்டம் அலை மோதி யது.
சென்னை
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் எப்போதும் கூட்டம் அலை மோதும் தி.நகர் பகுதியில் சற்று கூட்டம் குறைவாக காண ப்பட்டது. ஆனாலும், துணி விற்பனை மும்மரமாக நடந்தது. பட்டாசு விற்பனையில் மந்தமாகவே இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நகைகளையும் உடைமைகளையும் பாது காப்பாக வைத்துக் கொள்ளு மாறு ஒலி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.