tamilnadu

img

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை அச்சத்தில் பொதுமக்கள்

தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில், பொது மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்ப டுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.  இதுகுறித்து, ஆவணம் கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஊரா ட்சி மன்றத் தலைவர் ஆகியோ ருக்கு அனுப்பி உள்ள  கோரிக்கை மனுவில், “ஆவ ணம்-பெரியநாயகிபுரம் கிரா மத்தில் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்  திரிகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்க ளிடம் பலமுறை முறை யிட்டும் நடவடிக்கை எடுக்க ப்படவில்லை.  நாளுக்கு நாள் பெருகி வரும் தெருநாய்களால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்து க்குள்ளாவதும், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் நாய்க்கடிக்கு ஆளாவதும், தொடர் கதையாக உள்ளது.  பராமரிப்பின்றி திரியும் வெறி நாய்கள் கால்நடைகளையும் விட்டு வைப்பதில்லை.  வெறி நாய்க்கடியால் ரேபிஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபா யம் உள்ளது. இதனால் பெண்கள், முதியோர், பொ துமக்கள் சாலையில் சென்று வரவும், பள்ளிகளுக்கு குழ ந்தைகளை தனியாக அனு ப்பவும் பயப்படும் சூழல் உள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து,  தெருநாய்களை அப்புறப்ப டுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.