தஞ்சாவூர், செப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை அலுவலகத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தின சிறப்பு பேரவை ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றியச் செய லாளர் ஏ.உலகநாதன் தலைமை வகித்தார். சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்ன துரை சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஏ.கோவிந்தசாமி, சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் மதுக்கூர் வை.சிதம்பரம், சேது பாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வி.தொ.ச ஒன்றியத் தலைவர் குமரேசன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூரில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில், தோழர் பி.சீனிவாசரா வின் உருவப் படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பி னர் என்.சிவகுரு தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் இரா.புண்ணிய மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகி யோர் நினைவஞ்சலி உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டத் தலைவர் கே.அபிமன்னன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணை பொதுச் செய லாளர் கவிஞர் களப்பிரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த் சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியம் கீழக்கரம் பயத்தில் தோழர் பி.எஸ்.ஆர் நினைவு தின நிகழ்ச்சிக்கு, ஆர்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடி ஏற்றி வைத்து பேசி னார். ராஜேந்திரன், காந்தி மற்றும் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கட்சியின் கும்பகோணம் நகர்க்குழு சார்பில் நடந்த நிகழ்விற்கு நகர குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பின ரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் துணைப் பொதுச் செயலாளரு மான சின்னை பாண்டியன், பிஎஸ்ஆர் வரலாறு குறித்து விளக்கி பேசினார். பாபநாசம் திருப்பனந்தாள் திருவிடை மருதூர் விவசாய தொழிலாளர்களின் சங் கம் சார்பில் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தின சிறப்பு பேரவை கும்ப கோணத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஏ.மாலதி முன்னிலை வகித்தார். விவசாயிகளின் தொழிலாளர் களின் இன்றைய பிரச்சனைகளும் தீர்வும் என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பி.ஜேசுதாஸ் (குடந்தை), சா.ஜீவபாரதி (திருவிடைமருதூர் வடக்கு), பழனிவேல் (தெற்கு), பி.எம்.காதர் உசேன் (பாபநாசம்), சாமிக்கண்ணு (திருப்பனந்தாள்), குடந்தை நகரச் செயலாளர் செந்தில் குமார், கும்பகோணம், திருவிடைமருதூர், தெற்கு, வடக்கு, பாபநாசம், திருப்பனந் தாள், கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மன்னார்குடி
மன்னார்குடியில் சிபிஎம் நகரக்குழு சார்பில் பிஎஸ்ஆர் உருவப்படத்திற்கு நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகரக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரா, கே.அகோரம், எம். சிராஜுதீன், பி. கலைச்செல்வி, கே. மகாதேவன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் திரளாய் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி
சிஐடியு திருத்துறைப்பூண்டி மையம் சார்பில் பி.எஸ்ஆர் நினைவு தினத்தன்று மன்னை சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.மாலதி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரிமுத்து பி.எஸ்.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, செங்கொடியினை ஏற்றி வைத்து பேசினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, வி.ச மாவட்டச் செயலாளர் வி.எஸ். கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், சி.ஜோதி பாசு, கே.என்.முருகானந்தம், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செய லாளர்கள் டி.வி.காரல்மார்க்ஸ், வி.டி.கதி ரேசன், கு.பாலசுப்பிரமணியன், வி.ச மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியம் முழுவதும் 50 இடங்களில் பி.எஸ்.ஆரின் உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத் தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செய லாளர் என்.இராதா தலைமை தாங்கி னார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்ர மணியன் முன்னிலை வகித்தார். வலங்கை மான் ஒன்றியம் கொக்கலடி கிராமத்தில் பி.சீனிவாசராவ் உருவப் படத்தை திறந்து வைத்து செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் ஏற்றி வைத்து உரையாற்றினார். இதே போல் வலங்கைமான் ஒன்றி யத்தில் 50 இடங்களில் பிஎஸ்ஆரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. ஆலங்குடி கடைவீதியில் செங் கொடி ஏற்றி பிஎஸ்ஆரின் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட் டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் எஸ். சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் என்.பாலையா, கே.கலியபெரு மாள், சி.கருப்பையன் உள்ளிட்ட மற்றும் கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்னிலம்
நன்னிலம் ஒன்றியம் திருமீயச்சூர் கிராமத்தில் ஏகே.ஜி நகர், வடபாதி, தென் பாதி, தேரடி கட்டளை மேலும் பல்வேறு இடங்களில் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி செங்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வி.ச, வி.தொ.சங்கத்தின் சார்பாக சந்தா பதிவு துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் தங்க ராசு முன்னிலை வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாகை ஒன்றியம், சிக்கல் நகரில் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தின அஞ்சலி நிகழ்வு, திங்கட்கிழமை நடைபெற்றது. தோழர் பி.எஸ்.ஆர் உருவப்படத் திற்கு, மாலை அணிவித்து, மலர்கள் தூவி, சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், வி.தொ.ச. ஒன்றியச் செய லாளர் எஸ்.என்.ஜீவாராமன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் வி.வி.ராஜா மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
குடவாசல்
குடவாசல் ஒன்றியம் பிலாவடி, கண்டி ராமணிக்கம் என ஒன்றியம் முழுவதும் பிஎஸ்ஆர் நினைவு தினக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. முன்னதாக குடவாசல் கட்சி அலு வலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமையில் கட்சியின் மாபெரும் தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தின கொடியேற்றி செ வவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள். கிளை செயலாளர்கள் ராஜா, மகாலிங்கம் ஆகி யோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கொரடாச்சேரி ஒன்றி யத்தில் ஒன்றிய செயலாளர் கே.சீனி வாசன் தலைமையில் கட்சி கிராமங்கள் அனைத்திலும் செங்கொடி ஏற்றப்பட்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.மணி யன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.மருதையன் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், கட்சி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் க.அடைக்கண் தலைமை வகித்தார். பி.சீனிவாசராவ் படத்திற்கு மாலை அணிவித்து மாநிலப் பொருளா ளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்பு மணவாளன், சிபிஎம் அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.