தஞ்சாவூர், ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலை வர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா திங்கள்கிழமை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலக வளாகங்களில் நடை பெற்றது. முன்னதாக, ஊராட்சி மன்ற தலை வரும், அதனைத்தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவருக்கும் பத விப்பிரமாணம் செய்து வைத்தனர். பதவி ஏற்பு விழா நடைபெற்ற ஊராட்சிகளும், அதன் தலைவர்க ளின் விபரம் வருமாறு: அலிவலம் - ஆசைத்தம்பி, அம்மையாண்டி- வை. முத்துராமலிங்கம், இடையாத்தி –செ.அன்புக்கரசி, காலகம் - ரா. செந்தில்குமார், களத்தூர்- தி.மாரி முத்து, கல்லூரணிக்காடு –வே.சுந்தர ராஜன், குறிச்சி –க.வைரக்கண்ணு, மடத்திக்காடு –சு.சுதாசினி, மாவடு குறிச்சி –ப.அமிர்தம், ஒட்டங்காடு –ரெ.ராசாக்கண்ணு, பைங்கால் - சு. அமுதா, பழையநகரம்-அ .சுரேகா – பாலத்தளி – சு.விஜயா, பெரிய நாயகிபுரம் -மு.வத்சலா, பின்ன வாசல்- ந.கண்மணி, பூவாளூர் -ரா.முருகேசன், புனல்வாசல் - ரா. சிவசம்பாள், செங்கமங்கலம்- ரா. செல்வம், செருவாவிடுதி வடக்கு –த. விஜயராமன், செருவா விடுதி தெற்கு –த. ராமஜெயம், சொர்ணக்காடு –ரா.விஜயபாஸ்கரன், தென்னங்குடி – ச.குணதா, திருச் சிற்றம்பலம் - மு.மோகன், துற விக்காடு- ஆர்.கற்புக்கரசி, வலப்பிர மன்காடு –சி.கணேசன், வாட்டாத் திக்கோட்டை- ப.பரமேஸ்வரி ஆகி யோர் பொறுப்பேற்றுக் கொண்ட னர்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
பேராவூரணி ஊராட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும். ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக கூட்டமாளிகை யில், திங்கள்கிழமை வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பேராவூரணி ஒன்றியக்குழுவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக் கண்ன், உறுப்பினர்கள் அனைவ ருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. பேரா வூரணி ஒன்றிய ஆணையர்கள் சடை யப்பன் (வ.ஊ ), தவமணி (கி. ஊ), துணை வட்டார வளர்ச்சி அலு வலர் மகேஷ் உட்பட ஒன்றிய அலுவ லர்கள் கலந்து கொண்டனர். வார்டு எண் வாரியாக பதவி ஏற்றுக் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு: வார்டு எண் : 1.க.ரேவதி (சுயே), வார்டு எண்: 2.கோ.அமிர்தவள்ளி (அதிமுக), வார்டு எண் : 3. ஆ.நவனீ தம், (திமுக), வார்டு எண்: 4. ஆல்பர்ட் குணாநிதி (திமுக), வார்டு எண்: 5. உ. அண்ணாத்துரை (திமுக), வார்டு எண் : 6. ர.சசிகலா (அதிமுக), வார்டு எண்: 7. போ.மாலா (அதிமுக), வார்டு எண்: 8. ஜெ.ராஜப்பிரியா (திமுக), வார்டு எண்: 9. அ.பெரியநாயகி (பி.ஜே.பி), வார்டு எண்: 10, மு. பாக்கி யம் முத்துவேல் (அதிமுக), வார்டு எண்: 11. ஆர்.ராஜலெட்சுமி (அதி முக), வார்டு எண்: 12. அ.மதிவாணன் (திமுக), வார்டு எண்: 13 உ. துரை மாணிக்கம் (அதிமுக), வார்டுஎண்:14 ம.சங்கவி (திமுக), வார்டு எண் :15 ரா.சுந்தர் (அதிமுக) ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சி லர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிபிஐ ஒன்றிய கவுன்சிலர் இரா. ஞான மோகன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற சிபிஎம் 13வது ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் கோ. வேதரத்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை வாழ்த்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் பேசினார். சிபிஐ தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், அமுமுக நகர செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கச்சனம் ஊராட்சி மன்ற தலை வராக கௌசல்யா முருகானந்தம், அம்மனூர் எஸ்.முத்துக்குமாரசாமி, கோமல் ஊராட்சி மன்றத் தலை வராக பத்மணி ஜீவானந்தம், சேகல் ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரி ரங்கசாமி உள்ளிட் டோர் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
அறந்தாங்கி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் 26 வார்டு ஒன்றிய கவுன்சிலர்கள், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் 15-வார்டு ஒன்றிய கவுன்சிலர்கள், மண மேல்குடி ஒன்றியத்தில் 15-வார்டு ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சுயேச்சை உள்பட வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அறந்தாங்கி வட்டாட்சியர் முன் னிலையில் பதவிப்பிரமாணம் ஏற்றனர்.