தஞ்சாவூர், ஏப்.30 - தஞ்சாவூர், டி.பி.எஸ் நகர் சிஐடியு மாவட்ட அலுவல கத்தில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் ஊசி, பாசி, மணிமாலை, பிளாஸ் டிக் பொருட்கள் விற்பனை செய்து வரும், நரிக்குறவர் சங்கம் (சிஐடியு) பேரவைக் கூட்டம் சனிக்கிழமை மாத வன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், முறை சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, முறைசாராத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி செல்வேந் திரி, மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்கம் முருகேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தலைவராக சுகன்யா, செயலாளராக ரேவதி, பொருளாளராக சத்யா, துணைத் தலைவராக நந்தினி, துணைச் செயலாள ராக குஷ்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில், பழங்குடியின நரிக்குறவர் மக்கள் தாங்கள் பாரம்பரியமாக விற்பனை செய்து வரும் பாசி, மணிமாலை, ஊசி விற்பனை செய்ய இடம் ஒதுக்கித் தர வேண்டும். மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும். நக ராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.