தஞ்சாவூர், மே 20- குடிமராமத்துப் பணிகளை தாம தமின்றி, திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “மேட்டூர் அணை கடந்த 2008 ஆம் ஆண்டில் மட்டுமே ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதற்கு பிறகு பல ஆண்டுக ளாக ஜூன் 12 ஆம் தேதி பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட வில்லை.
இந்த ஆண்டு இயற்கை ஒத்துழைத்ததால் மேட்டூர் அணை நிரம்பி உள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவ சாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். தமிழக அரசு மூலம் டெல்டா மாவட்டம் முழுவதும் பாசன ஆறு கள், வாய்க்கால்களை தூர்வாரு வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை தண்ணீர் வருவ தற்கு முன்பாக, போர்க்கால அடிப்ப டையில் செய்து முடித்திட வேண்டும். ஜூன் 12 தண்ணீர் வருவ தற்கு முன்பு செய்ய முடியாத, பணிகளை தொடங்கக் கூடாது.
குறிப்பிட்ட காலத்திற்குள் முடியக் கூடிய பணிகளை மட்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். சாகுபடி பணிகளை தொடங்கிட ஏதுவாக தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். தமிழகஅரசு 105 நாட்க ளில் விளையக் கூடிய குறுகிய கால ஏடிபி 36, பொன்னி போன்ற விதை ரகங்களை வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது கொரோனா பாதிப்பு, கடந்த ஆண்டு கஜா புயல் ஆகிய வற்றால், பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு, விவசாய பணிகளை மேற் கொண்டிட ஏதுவாக, கூட்டுறவு வங்கிகள், அரசுடைமை வங்கிகள் மூலம் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறை, பொதுப் பணித்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, நடப் பாண்டு குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும். அதற் கான அனைத்து நடவடிக்கைக ளையும் மாவட்ட நிர்வாகம், மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.