தஞ்சாவூர், ஜூலை 14- அமெரிக்கத் தமிழாசிரி யர்களுக்குப் இணைய வழி யில் புத்தொளிப் பயிற்சி வகு ப்புகளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்து கிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ் வளர் மையம் இணையவழிப் புத்தொளிப் பயிற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி களைச் சேர்ந்த ஏறத்தாழ 208 தமிழாசிரியர்களுக்கு, “மாறி வரும் உலகச்சூழலில் தமி ழ்மொழிக் கற்றல்-கற்பித்த லும், புதிய உத்திகளும்” என்னும் தலைப்பில் ஏற த்தாழ இருமாத காலப் பயி ற்சி இதன்வழி வழங்கப்பட வுள்ளது. அயலகத்தில் வாழும் தமிழர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்து றையால் தமிழ்ப் பல்கலை க்கழகத்தில் ஏற்படுத்த ப்பட்டிருக்கும் தமிழ் வளர் மையமும், அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளன. ஜூலை 11 அன்று, இப்பயிற்சி யினைத் தமிழ்ப் பல்கலை க்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரம ணியன் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.