தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் 3 ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மலர்தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து, அங்கிருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. திருஞான சம்பந்தம், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நீல கண்டன், நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, மாணவரணி நிர்வாகிகள் கோவி.இளங்கோ, ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.