tamilnadu

சுழற்சிமுறை பொதுப் பணியிட மாறுதலை அமல்படுத்துக! நாகை, தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/நாகை, ஏப்.25-இளநிலை உதவியாளர் களுக்கான தேர்வினை ஊழல் முறைகேடின்றி, வெளிப்படைத் தன்மையுடன் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடத்த வேண்டும். ஏ,பி,சி சுழற்சி முறையில், பலஆண்டுகளாக ஒரே கடையில்வேலை செய்யும் ஊழியர்களைமாற்றி, பொது வெளிப்படைத்தன் மையுடன் எவ்வித பரிந்துரையும் இன்றி பணியிட மாற்றம் ஏற் படுத்தித் தர வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதிலிருந்து இரவு8 மணி ஆக குறைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொகையை, வங்கி நிர்வாகம் நேரடியாக கடையில் வந்து, ஊழியர்களிடம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைஊழியர்களை மிரட்டி சமூக விரோதிகள் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும். தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்து காலமுறைஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கும், கடைகளில் விற்பனை செய்து வைக்கப்பட்டிருக்கும் பணத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக்மதுபான கடைகளில் அரசு செலவில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவசதி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன், மாவட்டப் பொருளாளர் க.மதியழகன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.கருணாநிதி, கே.சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் மில்லர்பிரபு, மாவட்டத் தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, டாஸ்மாக் ஊழியர் சங்கநிர்வாகிகள் எம்.சரவணன், ஏ.நெடுஞ்செழியன், ஏ.ஜி.பன்னீர்செல்வம், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.முருகேசன், பி.எம்.வேல்முருகன், பி.ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் புதிய பேருந்துநிலையத்தில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் தலைமை வகித்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, நாகை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சிவனருட்செல்வன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வி.செல்வகுமார்,அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில நிர்வாக உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் மற்றும் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.ராமலிங்கம் நன்றி கூறினார்.