tamilnadu

img

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்காதே தொடர் போராட்டத்தில் ஈடுபட ஊழியர் சங்கம் முடிவு

சேலம், செப். 4- எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண் டித்து தொடர் போராட்டங்கள் நடத்த காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சேலம் சுனில் மைத்ரா நினைவகத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்டப் பொதுச்செயலாளர் ஆர்.தர்மலிங்கம் செய்தியளார்களிடம் கூறுகையில்,  1956 ஆம் ஆண்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் கடந்த 64 ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இத்தகைய நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பங்கு சந்தையில் மத்திய அரசு பட்டியலிட போவதாக தெரிகிறது.  இதனை வன்மையாக கண்டிக்கி றோம்.  ஏற்கனவே, இந்தியாவின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நடவ டிக்கைகள் பொருளாதார நெருக்கடி யில் தள்ளியுள்ளன. தற்போது கொரோனா நோய்த்தொற்று காரண மாக எடுக்கப்பட்ட பொதுமுடக்கம் மேலும், நெருக்கடியை அதிகரித் துள்ளது.

இத்தகைய சூழலிலும் எல்ஐசி மிகச் சிறப்பான செயல்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. எல்ஐசியின் சொத்து மதிப்பு 31,96,214.81 கோடி யாக உள்ளது. இவ்வாறு மாபெரும் வளர்ச்சி அடைந்த எல்ஐசியின் பங்கு களை விற்க பங்கு சந்தையில் பட்டிய லிட மத்திய அரசு அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருவது மிகுந்த கவலைக்குரியது. அரசின் இத் தகைய நடவடிக்கைகள் எல்ஐசியை தனியார் மயமாக்கும் முயற்சி என காப் பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருது கிறது.  எனவே, எல்ஐசியின் பங்கு விற்ப னையை எதிர்த்து தொடர் இயக்கங் கள் நடத்த காப்பீட்டுக் கழக ஊழியர்  சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்பின் னரும் எல்ஐசி பங்கு விற்பனை சம் பந்தமாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் உடனடியாக நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் நரசிம்மன், நிர்வாகிகள் கலியபெரு மாள், கலைச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.