tamilnadu

ஊரடங்கு காலத்தில் உணவளித்த மனிதநேயம்: உதவியவர்களுக்கு நன்றி செலுத்திய தமுமுக

கும்பகோணம், மே 20- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திரு நறையூர் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் கல்வி ஆம்பு லன்ஸ் மருத்துவ சேவை ரத்ததான முகாம் அவ்வப்போது ஏழை எளியவர்க ளுக்கு உதவி என மக்கள் தேவை அறிந்து சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவால் மக்கள் முடங்கிக்கிடந்த காலங்களில் தொடர்ந்து  தொய்வின்றி உணவளித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி களை பொதுமக்கள் பாராட்டி வரு கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாச்சியார் கோவில் திருநறையூர் கிளை தலைவர் நூருல் அமீன் கூறுகையில், கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமுமுக தஞ்சை வடக்கு மாவட்டம் திரு நறையூர் நாச்சியார் கோவில் கிளை சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வந்தோம்.

உணவு விநியோகம், மளிகை பொருட்கள் விநியோகம், விழிப்புணர்வு பிரச்சாரம் என 8 கட்டங்களாக உதவிக ளை செய்து வநதோம். மார்ச் 25 முதல் மே 17 வரை தொடர்ந்து 54 நாட்கள்  சாதி மதம் பாராமல் ஏழை எளியவர்கள், உள் ளாட்சி துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் மருத்துவத்துறை என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டி ருக்கும் பணியாளர்களுக்கும் புலம் பெயர்ந்த வெளி மாநிலத்தினர் என தினந் தோறும் சுமார் 150 முதல் 200 நபர்களு க்கு மதிய உணவுகள் தட்டுப்பாடின்றி வழங்கி வந்தோம்.  தஞ்சை மாவட்டம் கொரோனா தொற்றிலிருந்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மதிய உணவு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நிவாரண பணிக்காக கிளை சார்பாக ரூ. 2,50,000 செலவிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொருளாதாரம் வழங்கிய சகோ தரர்களுக்கும் கிளை நிர்வாகிகளுக்கும் அபிமானிகளுக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம் என்றார்.