tamilnadu

img

பட்டுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ். நினைவு தினம்

 தஞ்சாவூர் டிச.7- அமமுக அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தந்தையும், தமிழக முன்னாள் அமைச்சருமான, எஸ்.டி.சோமசுந்தரத்தின் 18-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அருகே செண்டாங்காடு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு அமமுக மாவட்டச் செயலாளர் மா.சேகர் தலைமையில், கழக அமைப்பு செயலாளர் எஸ்.கே.தேவதாஸ் முன்னிலையில், அமமுக துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ராஜேந்திரன், ஆர்.தென்னரசு, சி.பி.ராஜபிரபு, ஏ.ஆசைத்தம்பி, நகர செயலாளர் வி.எம்.பாண்டியராஜன், பேராவூரணி பேரூர் நகரச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் எம்.துரை ராமசந்திரன், அரங்கசிவம் உள்ளிட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனார். பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.ரவி வரவேற்றார். செண்டாங்காடு ஊராட்சி கழக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.