tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கிடுக! சிஐடியு வலியுறுத்தல்

கும்பகோணம் மார்ச் 24- தூய்மைப் பணியாளர்க ளுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளும், சிறப்பாக பணியாற்றுவதற்காக ஒரு மாதத்திற்கான சிறப்பு ஊதி யத்தை உடனடியாக அரசு வழங் கிட கோரி சிஐடியு சங்கத்தின் சார்பாக கும்பகோணம் நக ராட்சி ஆணையர் மற்றும் கும்ப கோணம் கோட்டாட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது  அம்மனுவில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்க ளின் சுகாதாரத்தை அன்றாடம் பாதுகாத்து பணியாற்றி வரும் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ 250- க்கு பணி யாற்றி வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான கையுறை முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனை த்தும் வழங்கிட வேண்டும்.  மேலும் குடந்தையில் தூய்மை பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்ற ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் பேரிடர் நிவாரணநிதி யாக உடனடியாக ஒரு மாத ஊதி யத்தை கொடுத்து அவர்களது பணியை மென்மேலும் சிறப் பிக்க வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் மா.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் சா. ஜீவபாரதி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசு தாஸ், மாவட்டத் துணைச் செயலா ளர் பார்த்தசாரதி மற்றும் உள் ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகி கள் ஜெயராமன், மாரிமுத்து ஆகி யோர் சென்று மனு கொடுத்தனர்.