tamilnadu

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.385 வழங்கக் கோரி போராட்டம்

கும்பகோணம், ஜூலை 9-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரா ட்சியில் ஒப்பந்த துப்புரவு தூய்மை காவலர்க ளாக சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர். தற்போது நோய் பரவுவ தைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் ஒப்ப ந்த துப்புரவு பணியாளர்கள் நகரை தூய்மை ப்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு பணியா ளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் கோவை  எஸ்.எஸ்.இன்டரியர்ஸ் என்கிற நிறுவனம் ஒப்பந்தம் செய்து கும்பகோணம் நகராட்சி ஒப்பந்த ஊழியர்களை நிர்வகித்து வரு கின்றனர்.  ஆனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தர விட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 385 வழங்குவது இல்லை. அதனால் கும்பகோணம் நகர 30 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு தஞ்சை மாவ ட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி 385 வழ ங்கிடவும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்க ளுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, தீபாவளி பொங்கல் பண்டிகை கால  போனஸ் வழங்க வலியுறுத்தி கடந்த ஜூலை 2  அன்று கும்பகோணம் நகராட்சி ஆணையரி டம் சிஐடியு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

ஆனால் இதுவரை நடவடிக்கை  இல்லாததால் ஜூலை 7 முதல் நகர துப்புரவு  ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்தை தொடர்ந்து, புதனன்று  கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு பேச்சுவா ர்த்தையின் முடிவில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியான 385 மற்றும் மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு  பண்டிகை கால போனஸ் அனைத்தும் ஜூலை  மாத இறுதியில் கோவை எஸ்.எஸ். நிறுவ னத்திடமிருந்து பெற்றுத் தருவது என உறுதி  அளித்தனர்.  தொடர்ந்து 7 ஆண்டுகளாக கும்பகோணம்  நகர ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி  வரும் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொட ர்ந்து பணி வழங்கிடவும் கும்பகோணம் வட்டாட்சி யர் நகராட்சி ஆணையர் உறுதியளித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக அதி காரிகள் ஒப்புதல் வழங்கியதால் தற்காலிக மாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.