கும்பகோணம், ஆக.19- கும்பகோணம் நகராட்சி துப்புரவு தொழி லாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி ரூ.385 தினக்கூலி வழங்கிட வலியுறுத்தி சிஐடியு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் கும்பகோணம் நகராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழி லாளர்கள் 415 பேர் புதிதாக டெண்டர் எடுத்து உள்ள தமிழக உள்ளாட்சித் துறை அமைச்ச ரின் பினாமி நிறுவனமான எஸ்.எஸ்.இன்ஜி னியரிங் நிறுவனம் தஞ்சை மாவட்டம் ஆட்சி யர் உத்தரவுபடி தினக்கூலியாக ரூ.385 வழ ங்காமல் ரூ-275 மட்டும் கொடுத்து ஒவ்வொரு துப்புரவு தொழிலாளர்களின் கூலியில் தினம் ரூ.110 ஏமாற்றி தொழிலாளர்களை மிரட்டி வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி கையாடல் செய்து வருகிறது. இம்முறைகேட்டில் ஈடுபடும் கோவை எஸ்.எஸ்.இன்ஜினியரிங் ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும் பெரும் முறைகேட்டிற்கு துணை போகும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜேசுதாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.