tamilnadu

காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து முறைப் பாசனம் கண்காணிப்பு பொறியாளர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 13 - காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணை யில் இருந்து, திங்கள்கிழமை மாலை 6 மணி  முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப் படுவ தாக, பொதுப்பணித்துறை தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட, நீர் ஆதாரத் துறை கண்காணிப்பு பொறியாளர் ச.அன்பரசன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  “தமிழக முதலமைச்சரால் காவிரி டெல்டா  பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12 ஆம் நாள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற க்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 16 ஆம் நாள்  கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து கிளை ஆறுகளிலும் கடைமடை வரை நீர் சென்றடைந்தது. இத னால், டெல்டா பகுதிகளில் விவசாயப் பெரு ங்குடி மக்கள் விவசாயப் பணியை, தீவிரமாக  தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

 தற்போது உள்ள நிலவரப்படி, தண்ணீ ரை குறுவை மற்றும் சம்பா சாகுபடி பாசன த்திற்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டிய  நிலை உள்ளதால், நீர்பங்கீட்டில் தேவை க்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவ சாயப் பெருங்குடி மக்கள் குறுவைப் பாச னம் சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொ ள்ளவும், நீர்பங்கீட்டில் முறைப்படுத்தவும் வேண்டியுள்ளது.  மேட்டூர் அணையில் தினமும் 13  ஆயிரம் கன அடி தண்ணீர் எடுக்கப்படு வது, குறைக்காமல் எடுத்து திங்கள்கிழமை மாலை முதல் முறைப் பாசனத்தை அமல்ப டுத்தவும், முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும், அடுத்த ஆறு நாட்கள் காவிரியிலும், சுழற்சி முறையில் முறைவைத்து, தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாயில் மேல்பகுதி முறை, கீழ்ப்பகுதி முறை என முறைவைத்து தண்ணீர் விடவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு குறுவை பயிரிட எவ்வித  இடையூறும் இல்லாத, பாசன வசதி அளிக்க ப்பட வேண்டும் என்றும், பருவமழை கிடைக்க ப்பெறின் அதற்கேற்ப நீர்பங்கீட்டினை மாற்றி  அமைத்துக் கொள்ளலாம்’ எனவும் திருச்சி  மண்டல தலைமைப் பொறியாளர் அறிவு றுத்தியுள்ளார். எனவே, விவசாயிகள் நீரினை  சிக்கனமாகப் பயன்படுத்தி பொதுப்பணித்து றையின் நீர் பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.