கும்பகோணம், செப்.23- கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு சாந்தி நகரில் கடந்த ஐந்து நாட்களாக பாதாள சாக்கடை தொட்டியிலி ருந்து கழிவுநீர் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடி அருகிலுள்ள காலி மனையில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. அதிலிருந்து வரும் கொசுக்கள் மூலம் மர்ம காய்ச்சல் மற்றும் உடல்களில் கொப்ப ளங்கள் பரவுதல் போன்றவற்றால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஒரு இடம் மட்டுமா கழிவு நீர் தேங்கி வருகிறது என்று அலட்சிய மாக கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் அருகில் உள்ள குடி யிருப்பு வாசிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை உருவாகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை அகற்ற உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.