tamilnadu

img

மாவட்ட கராத்தே போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில், மாவட்ட அளவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.  திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் ரேணுகாதேவி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து  பல்வேறு பிரிவுகளில் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், 20 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த, 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 98 தங்கம், 50 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களை 178 அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்று சாதனை படைத்தனர்.   சர்வதேச பயிற்சியாளர் நாமக்கல் ராமச்சந்திரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். கராத்தே போட்டியின் நடுவரும் சர்வதேச  பயிற்சியாளருமான திருச்சிற்றம்பலம் ஷேக் அப்துல்லா மற்றும் அவரது தலைமையிலான பயிற்சியாளர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.