tamilnadu

டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் பாதிப்பு

தஞ்சாவூர், மே 9- டீசல் விலை ஏற்றத்தினால் மீனவர்களுக்கு மிகப்பெரிய அள வில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவை  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன வர் பேரவை மாநில பொதுச்செயலா ளர் ஏ.தாஜூதீன் கூறுகையில், “டீசல் விலை ஏற்றத்தினால் மீன வர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் டீசலின் மீது 75 சதவீதத்துக்கு மேல் வரிகளை போட்டு மக்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று வியாதியாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் மக்கள் பொ ருளாதார சிக்கலில் சிக்கி இருக்கும் போது டீசல், பெட்ரோல் மீது மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி உள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை தடுக்க முடியாது.

இத னால் ஏழை, எளிய மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உடனடியாக அரசு வாபஸ் பெற வேண்டும்.  மத்திய அரசு மூலம் இருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி  மட்டுமே  ரூ.12,500 கோடி நிலுவை யில் உள்ளது. மாநில அரசு இத னைப் போராடிப் பெற வேண்டும். மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் வளர்ச்சித் திட்டங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். ஒரு நாள் மீன்பிடிக்கச்  செல்லும் போது 80 சதவீதம் டீசல் பயன்படுத்தினால் தான் தொழில் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது தொடர் விலை ஏற்றம் இருந்தால் மீன்பிடித் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு, மீனவர் வாழ்வு கேள்விக்குறியாகி விடும். இதனை நம்பி தொழில் செய்யக் கூடிய ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.   மீன்பிடித் தடைக்காலமாக இருப்பதால், தற்போது சிறிய படகுகளை தவிர பெரிய படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் கடந்த 45 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தடை உத்தரவு காலத்தை, கணக்கில் சேர்த்து, மே 23 அன்று தொழில் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் “ என்றார்.