தருமபுரி, ஏப்.1- இண்டூரை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்துள்ளர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்றதொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறர். இந்நிலையில், திங்களன்று உதய சூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது. இதனையடுத்து, அள்ளிகிராமத்தில் வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்திசெய்வேன், வெளியூர்க்காரர் மக்களின் பிரச்சனையை தீர்க்கமாட்டார். திமுகஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 60வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கைஎடுக்கப்படும். 2 லட்சம் பேருக்கு வேலைவழங்குவதாக சொன்ன அன்புமணி வேலைவாய்ப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறுநாள் வேலைத்திட்டத்தில் பலகிராமங்களுக்கு வேலைதரவில்லை.காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வந்த உடன் நூறுநாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வேலை வழங்கப்படும்.
சட்டப்படியான கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து இண்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் ஆகவே எனக்குஉதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியானவாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கிராமமக்களை கேட்டுக் கொண்டார்.முன்னதாக, பொம்மசமுத்தரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ துவக்கிவைத்து பேசினார். இந்த பிரச்சாரத்தில் திமுக மேற்கு ஒன்றியச்செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், இண்டூர் பகுதி செயலாளர் பி.டி.அப்புனு, ஒன்றியக் குழு உறுப்பினர் முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மாதேஷ்வரன், பகுதி செயலாளர் எஸ்.பி.குட்டி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இப்பிரச்சாரம் பொம்ம சமுத்தரத்தில் துவங்கிய இண்டூர், தளவாய் அள்ளி, சோமன அள்ளி, தளவாய் அள்ளி, எச்சன அள்ளி,பண்ட அள்ளி, நாகர்கூடல், ஏலகிரி, டொக்குபோதன அள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.