tamilnadu

img

நல் வாழ்வு அமைச்சர்கள் மிரட்டலை மீறி அரசு மருத்துவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்

தஞ்சாவூர் அக்.31- வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ள அரசு மருத்துவர்கள் உட னடியாக பணிக்கு திரும்பா விட்டால், அவர்கள் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு புதிய மருத்துவர்கள் நிய மிக்கப்படுவர். மேலும் பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என நல்வாழ்வுத் துறை அமைச்ச ரின் புறந்தள்ளி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மிரட்டலை உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவமனைக ளில் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஏழாவது நாளாக வியாழக்கிழமை அன்று வேலை நிறுத்தப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் கால முறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயா ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு மருத்து வர்களுக்கு முதுநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவர் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் மாநில அள வில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அக். 25-ஆம் தேதி தொடங்கினர். இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் ஏராளமான மருத்துவர்கள் தொடர்ந்து 7-வது நாளாக வியா ழக்கிழமை அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி, தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தர்ணாவின் போது, பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு துணி களை கண்களில் கட்டிக் கொண்டும் தங்களது கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.                                                                                                                                                                                                                        சிபிஎம் ஆதரவு 
அரசு மருத்துவர்களின் போ ராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார், தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், திரு வையாறு எம்எல்ஏ துரை.சந்திர சேகரன் ஆகியோரும், நேரில் மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.