tamilnadu

தஞ்சாவூரிலிருந்து  32 உத்தரபிரதேச தொழிலாளர்கள்  சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

 தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் வட்டாரப் பகுதிகளில் பானி பூரி, கட்டுமானத் தொழில் உள்ளிட்ட வேலை பார்த்து வந்த உத்தரப்பிரதேசம் உள்பட பல வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பதிவு செய்திருந்தினர். இதில் ஏற்கனவே மகாராஷ்டிரம், பீகார், ராஜஸ்தானை சேர்ந்த சுமார் 2,500 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், வியாழன் அன்று புலம் பெயர் தொழிலாளர்கள் 2 பெண்கள் உள்பட 32 பேர் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், உணவும் வழங்கப்பட்ட பின், அவர்களை தனிப் பேருந்து மூலம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை செல்லும் இவர்கள் மே 29-ல் சிறப்பு ரயில் மூலம் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.