புதுக்கோட்டை, மே 24- ராஜஸ்தான் மாநிலத்திற்கு திரும்பி செல்ல விருப்பம் தெரி வித்த தொழிலாளர்கள் புதுக கோட்டை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தது: மாவட்டத்தில் வெளிமாநி லத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3,064 பேர் பணி செய்து வந்தார் கள். அதில் 21 மாநிலங்களை சேர்ந்த 1,800 நபர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு விருப்பம் தெரிவித்த னர். கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த 106 தொழிலாளர், மணிப் பூர், மேகாலயாவை சேர்ந்த தலா ஒருவர் என இதுவரை 108 தொழி லாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் பணி புரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 33 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரி வித்தனர். அதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் அனைவருக் கும் உரிய மருத்துவ பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டு உணவு, முகக்கவசம் உள்ளிட் டவை வழங்கி உரிய சமூக இடை வெளியுடன் பேருந்து மூலம் திருச்சி அழைத்து சென்று இரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பிற மாநில தொழிலா ளர்கள் விருப்பத்தின் அடிப்படை யில் பல்வேறு கட்டங்களாக தங்க ளது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது எனத் தெரிவித்துள் ளார்.