தஞ்சாவூர் அக்.24- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அப்போது, அங்கிருந்த கட்டுமான பொருட்களில் தண்ணீர் தேங்கியிருந்ததைக் கண்டு, மாநகராட்சி அலுவலர்களை டெங்கு கொசு புழுக்கள் உள்ள தா என பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். இதில் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டதால் ஒப்பந்ததாரர் மீது ரூ.10,000 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள், போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநக ராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனை கோட்ட மேலாளர் நடராஜ் உடனிருந்தனர்.