tamilnadu

12 சதவீத ஈரப்பதம் உள்ள பருத்தியை இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்யும் தஞ்சை ஆட்சியர் தகவல்

கும்பகோணம்,  ஜூன் 30- தஞ்சாவூர் விற்பனை குழு வின் கட்டுப்பாட்டில் இயங்கும் கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாப நாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த 3.6.2020 முதல் பிரதி  வாரம் புதன், வியா ழன் மற்றும் வெள்ளிக்கிழம ைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகி றது. இந்த மறைமுக ஏலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்க ளுடைய பருத்தியினை அதி கபட்ச விலைக்கு விற்று பய னடைந்து வருகின்றனர். ஜூன்  3 முதல் 949.238 மெட்ரிக் டன் அளவு உள்ள பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு 5165 எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன டைந்துள்ளனர். மேலும் இம்மறைமுக ஏலத்தில் இந்திய பருத்தி  கழகம் நிறுவனம் கலந்து கொண்டு விவசாயிகளின் பருத்தியிணை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். பருத்தி யின் ஈரப்பதம் 12 சதவிகிதம் இருக்கும் பட்சத்தில் இந்திய பருத்தி கழகம் அவற்றைக் கொள்முதல் செய்ய முன் வருவதால் விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை நன்கு உலர வைத்து கொண்டு வருமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.