தஞ்சாவூர், ஜூலை 1– பட்டுக்கோட்டை அருகே காவல்துறை தலைமைக் காவலர் ஒருவருக்கு கொ ரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதன்கிழமை காவல்நிலையம் மூடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோ ட்டையை அடுத்த மதுக்கூர் காவல் நிலை யத்தில், தலைமைக் காவலராகப் பணியா ற்றும் 56 வயது உடைய நபருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் அதிக ளவில் இருந்த நிலையில், அவருக்கு கொ ரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு கொரோனா தொற்று இரு ப்பது புதனன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை காலை சுகா தாரத்துறை பணியாளர்கள், காவல் நிலை யத்தைப் பூட்டி சீல் வைத்தனர். மேலும், காவல் நிலையம் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர். இதையடுத்து காவல்நிலையம் தற்காலிக மாக அருகில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படுகிறது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தலைமைக் காவலரின் வீடு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பின்புறமுள்ளதால், அவரது வீடு சுகாதா ரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.