tamilnadu

மத்திய பட்ஜெட்டை கண்டித்து பிப்.17 இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.11- கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான, மக்கள் விரோத மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து, தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்கள், மாநகரங்கள், நகரங்களில் இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் பிப்.17 திங் கள்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள் கோ.நீலமேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ.பாரதி (இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி), டி.கண்ணையன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம், எல்-விடுதலை) ஆகி யோர் தெரிவித்ததாவது, “இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை சீர்குலைத்து, மக்களி டையே மதப்பாகுபாட்டை ஏற்படுத்தும், தேச நலனுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்குப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு, விளை யாடும் போக்கைக் கைவிட்டு, போதிய நிதி ஒதுக்க வேண்டும்.  அரசுடமை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பொதுமக்கள் சேமிப்புக்கு உத்தரவாதமான பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து தனி யாருக்கு விற்கும் முடிவைக் கைவிட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப் பால் மூடப்பட்ட தொழிற்சாலைகள், வேலை இழந்த தொழிலாளர்கள் பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும். உரிய நிவா ரணம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி பிப்.17-ல் நடை பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் பேராதரவு தர வேண்டும்” என்றனர்.