tamilnadu

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கண்டனம் அக்.13,14 தஞ்சையில் 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் இடதுசாரிக் கட்சிகள் முடிவு

தஞ்சாவூர், அக்.3- இடதுசாரி கட்சி தலைவர்களின் தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம் தலைமை வகித்தார். இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் மு.அ.பாரதி, மாவட்டப் பொரு ளாளர் ந.பாலசுப்பிரமணியன், ஏஐடி யூசி மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம், மாநிலக் குழு உறுப்பி னர் ஜி.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், மாந கரச் செயலாளர் என்.குருசாமி, சிபிஐ  (எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முத லீட்டு திட்டங்களுக்கு பயன்ப டுத்தவேண்டும். வேலைவாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதி கரித்திட வேண்டும். அதுவரை மத்திய  அரசாங்கம் வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.  குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும். வேலை யிழந்த தொழிலாளர்களுக்கு மாதா ந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனி யாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த  வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத சட்ட த்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக  அதிகரிக்க வேண்டும். நிலுவை தொ கைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு விவ சாய நெருக்கடியிலிருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக அதி கரித்திட வேண்டும்” உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ  (எம்.எல்) லிபரேஷன் ஆகிய கட்சிக ளின் சார்பில் அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் மாவட்ட முழுவதும் 100 மையங்களில் பிரச்சாரம் மற்றும்  தெருமுனை கூட்டங்கள் நடத்து வது என்றும், அக்டோபர் 16 அன்று  தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வது” எனவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளது.  தஞ்சை மாவட்டம் முழுவ தும் நடைபெறும் மேற்கண்ட இயக்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என எனவும் சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய கட்சி  அணிகள் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் இடதுசாரி கட்சி களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் சிபிஐ அலுவலகத்தில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகி த்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஐ(எம்எல்) கட்சி நிர்வாகி விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நிர்வாகிகள் கே.ஆர்.தர்மரா ஜன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், சி.அன்பு மணவாளன், ராஜேந்திரன் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.  ரிசர்வ் வங்கி பணத்தை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி அக்.13, 14 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விரிவான பிரச்சாரம் நடத்துவது எனவும், அக்.16 அன்று புதுக்கோட்டையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.