tamilnadu

img

பரிதவிக்கும் பெற்றோர்..தனியார் கல்லூரிகளில் அட்டகாசம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்விக்கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, போக்குவரத்து கட்டணம் செலுத்த நிர்பந்திப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னையில் உள்ள பிரபல கல்லூரி கடந்த 21-ம் தேதி மாணவர்களின் இந்தாண்டிற்கான கல்விக்கட்டணம் விபரங்கள் தெரிக்கப்பட்டுள்ளன.  அதில், போக்குவரத்து கட்டணமாக 60,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 5000 ரூபாய் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கல்லூரியில், 2.50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் எனவும், கட்டணம் செலுத்தவில்லை எனில் 12.5 சதவிகித அபரதாம் விதிக்கப்படும் என கல்லூரி நிர்வகாம் அச்சுறுத்துவதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.தனியார் கல்லூரிகளில் அதிகமான கல்வி கட்டண வசூலிக்கப்படுவதால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.