tamilnadu

கல்லூரி மாணவி  தற்கொலை முயற்சி பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

 கும்பகோணம்,ஆக.29-  தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அடுத்த ஆலமங் குறிச்சி சேர்ந்த அன்பழகன் மகள் கவுசல்யா. இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் எம்ஃபில் படிப்பு பயின்று வந்தார். இவர் விலங்கியல் சம்பந்தமான ஆய்வுகள் நடத்தி ஆய் வறிக்கையை கல்லூரி பேரா சிரியர் ரவிச்சந்திரன் என்பவ ரிடம் கையொப்பம் இட கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேராசிரியர், மாணவி கவுசல்யாவிற்கு ஆய்வறிக்கையில் கையொப்பமிடாமல் காலம்  தாழ்த்தி கல்லூரி வேலை களை செய்து தருமாறும், நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை அடுக்க சொல்லியும், தண்ணீர் குடம் தண்ணீர் எடுத்து  வந்து வைக்க சொல்லியும், எவ்வித காரணம் இல்லா மல் அலைக் கழித்ததாக கூறப்படுகிறது.  ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஆக.31-ஆம் தேதியுடன் முடிவுறுவ தால் மாணவி மிகவும் ஏமாற்றத்துடன் இருந்து வந்ததாக தெரிகிறது.  இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவி கௌசல்யா கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்த விஷ மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த மாண வர்கள் பார்க்கவே உடன் பிற பேராசிரியருக்கு தகவல் தெரிவித்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் பேராசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கல்லூரி மாண வர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.