கும்பகோணம்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட அநீதியைக் கண்டித்து கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு போரா
டிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளால் தங்களின் உயிர் வாழும் உரிமை பாதிக்கப்படுகிறது என, ஜனநாயக வழியில் போராடிய அப்பாவி பொது
மக்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படும் மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் காவல்துறையைக் கொண்டு, குருவியை சுடுவது போல 15 க்கும் மேற்பட்டோரை சுட்டு வீழ்த்தியது. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனை கண்டித்து கடந்த 2018 மே 22ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடந்தை ஒன்றியச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜேசுதாஸ் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.நாகமுத்து, ஆர்.கலா, கே.குணசேகரன், கோவிந்தராஜ், ஐ.குருசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழினியன், ஒன்றியச் செயலாளர் ராமன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரி கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அநீதியைகண்டித்து போராட்டம் நடத்திய சிபிஎம் தலைவர்கள் 9 பேர் மீதுவழக்கு எண் 126/ 2018 குற்றப்பிரிவு 301, 143, 188, ஆகிய பிரிவுகளில் சுவாமிமலை காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து கும்பகோ
ணம் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது.
இந்நிலையில் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், கொல்லப்பட்ட அறப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் சிபிஎம் தலைவர்கள் 9 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு 2019 மே 22 அன்று, வழக்கு தொடர்ந்த
அதே நாளில் ஒரு வருடத்தில் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிஎம் தலைவர்கள் தஞ்சைமாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் ஜேசுதாஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.நாகமுத்து, ஆர்.கலா, கே.குணசேகரன், கோவிந்தராஜ், ஐ.குருசாமி, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழினியன், ஒன்றியச் செயலாளர் ராமன் ஆகியோரை விடுதலை செய்து கும்பகோணம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.