tamilnadu

img

தஞ்சைக்கு எகிப்து வெங்காயம் 2 டன் வரத்து வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தஞ்சாவூர், டிச.10- வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த ஏதுவாக மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ள வெங்காயத்துக்கு பொதுமக்களிடமிருந்து உரிய வரவேற்பு கிடைக்கவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே சென்றதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு கிலோ பெரிய வெங்காயமும், சின்ன வெங்காயமும் ரூ.200 வரை விற்ப னையானது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாமல் திணறினர். வெங்கா யத்தின் விலையை கட்டுப்படுத்த வும், பற்றாக்குறையை போக்கவும் மத்திய அரசு துருக்கி, எகிப்து நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தற்போது சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.  இதில் தஞ்சாவூர் காமராஜ் காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக 2 டன் பெரிய வெங்கா யம் வெங்காய மண்டிக்கு வந்தது. இந்த வெங்காயம் பெரிய அளவி லும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தது. இந்த வெங்காயம் கிலோ ரூ.110 என விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி எஸ்.கே.சிதம்பரம் கூறிய தாவது: எகிப்து நாட்டிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பெரிய வெங்கா யம் தற்போது தஞ்சாவூருக்கு முதற் கட்டமாக 2 டன் வந்தது. இந்த வெங்கா யத்தில் காரத் தன்மை குறைவாகவும், உரிக்க உரிக்க தோல் அதிகமாக இருக்கிறது. விலையும் குறைவாக இருந்தாலும், இந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் இந்த வெங்காயத்தை உணவகங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.  அதே நேரத்தில் நம் நாட்டு நாட்டு வெங்காயத்தை தான், விலை கூடுதலாக இருந்தாலும் பரவா யில்லை என பொதுமக்கள் கவலை யோடு வாங்கி செல்கின்றனர். மகா ராஷ்டிராவிலிருந்து வெங்காயத்தின் வரத்து தொடங்கி விட்டது. அடுத்த வாரத்தில் மகாராஷ்டிரா வெங்காயம் வந்ததும், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டும் விலை குறைய வாய்ப்புள்ளது” என்றார். அரபுநாடுகளுக்கும் இந்தியா வில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய வெங்காயம் காரத் தன்மையும், எண்ணெயில் இட்டு வதக்கவும், பொறிக்கவும் எளிதில் வதங்கும் தன்மை உடையது என்பதால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், குவைத், பஹ்ரைன் போன்ற நாடு களில் வசிக்கும் எகிப்தியர்கள் உள்ளிட்ட அரபு நாட்டவர்கள் விலை குறைவாக கிடைக்கும், எகிப்திய வெங்காயத்தை தவிர்த்து, விலை சற்றே கூடுதலாக இருந்தாலும் இந்திய நாட்டின் வெங்காயத்தையே விரும்பி வாங்குவர்.  அங்கு காய்கறிக் கடைக்கு வரும் அரேபியர்கள் கேட்கும் முதல் கேள்வியே, “ஃபீ பசல் ஹிந்த்?” இந்திய வெங்காயம் உள்ளதா? அந்த அளவிற்கு வெளிநாட்டின ரையும் கவர்ந்ததாக இந்திய வெங்கா யம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எகிப்தியர்களே விரும்பாத அந்நாட்டு  வெங்காயம் இங்கு விலை போகா ததில் ஆச்சரியம் இல்லை.