tamilnadu

ரத்த தான முகாம்

 தஞ்சாவூர், ஆக.31- கொரோனா பேரிடர் காலத்தில் மனித சேவை யாற்றும் வகையில், தமி ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி கிளை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து, ரத்த தான முகாமை நடத்தினர்.  திங்கள்கிழமை பேரா வூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு, டிஎன்டிஜே கிளைத் தலைவர் முகமது கனி தலைமை வகித்தார். காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்ச ந்திரன் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார். இம்மு காமில், தானமாகப் பெற ப்பட்ட 26 யூனிட் ரத்தத்தை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் வேல்முருகன், ரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.