tamilnadu

காமராஜர் பிறந்த நாள்: மத்திய, மாநில அரசுகள் இருட்டடிப்பு: இரா.முத்தரசன் கண்டனம்

தஞ்சாவூர், ஜூலை 15- காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியை தமிழக அரசு பல ஆண்டு களாக கல்வி வளர்ச்சி நாளாக கடை பிடித்து வந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாட முடியாமல் இருட்டடிப்பு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் ஞாயிறு அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறி யதாவது: “மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நாடு முழுவதும் திணிக்கும் செயலில் ஈடுபட்டு வரு கிறது. முன்பு தபால் துறையின் தேர்வு கள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த ப்பட்டுவந்தது. தற்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவது கடும் கண்டன த்துக்குரியது. உடனடியாக மத்திய அரசு அந்தந்த மாநில மொழிகளில் எழுத உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி ரீதியான படு கொலைகள் அதிகம் நடைபெற்று வரு கிறது. 12 தினங்களுக்கு ஒரு படுகொலை என, கடந்த 5 ஆண்டுகளில் 192 கொலை கள் நடந்துள்ளது. இவை முற்றி லும் தடுக்கப்பட வேண்டும். வடமாநி லங்களைப் போல் தமிழகத்திலும் தற்போது கும்பலாக தாக்கும் வன்மு றைகள் நடைபெறுவது கவலையை தருகிறது.  நாகை மாவட்டம் பொரவாச்சே ரியில் ஒருவர் மாட்டுக்கறி உடலுக்கு நல்லது என முகநூலில் பதிவு செய்து ள்ளார். அவரை தேடி கண்டு பிடித்த ஒரு கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. மருத்துவமனையில் தாக்குதலுக்கு ஆளானவர் சிகிச்சை பெற்று வருகி றார். இந்த கும்பலைச் சேர்ந்த அனை வரையும் காவல்துறையினர் கைது செய்து, இது போன்ற சம்பவங்களை  தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மத்திய அரசு நேரு குடும்பத்தையும், அவரையும் தொடர்ந்து விமர்சித்து அவரது புகழுக்கு களங்கத்தை ஏற்ப டுத்தி வருகிறது. இதன் வழியில் தமிழ கத்தில் கடந்த திமுக ஆட்சிக் கால த்தில் காமராஜரின் புகழை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல  வேண்டும் என காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியை  கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து  சட்டமாக இயற்றப்பட்டு கொண்டாட ப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக பள்ளிக் கல்வி த்துறை ஜூலை 15 ஆம் தேதியில் பள்ளிகளில் “நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் பள்ளி மாண வர்களின் பங்களிப்பு” என்ற திட்ட த்தை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி யுள்ளது. மழைநீர் சேகரிக்க எத்த னையோ நாட்கள் இருக்கும் போது, காமராஜர் பிறந்த நாளில் இதனை தேர்வு  செய்து அந்த திட்டத்தை செய ல்படுத்தி, காமராஜர் பிறந்தநாளை கொண்டாட விடாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் காமராஜர் பிறந்த நாளை  இருட்டடிப்பு செய்யும் விதத்தில் செயல்படுவது கடும் கண்ட னத்துக்குரியது. கடந்தாண்டு வீசிய கஜா புய லின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய இழப்பீடும், நிவார ணமும் வழங்காததை கண்டித்து வரும் ஜூலை 30 ஆம் தேதி தஞ்சாவூர் மாவ ட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடந்த 8 ஆண்டுகளாக டெல்டாவில் குறுவை சாகுபடியை இழந்துள்ள நிலையில், இந்தாண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு போக  சாகுபடிக்காவது கர்நாடக அரசிட மிருந்து காவிரியில் தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது, பெட்ரோல்,டீசல்வவிலை உயர்வு பட்ஜெட்டில் அறிமுகம் முடிந்த உடனயே ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொரு ட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து ஏஐடியூசி சார்பில் நாடு முழுவதும் ஜூலை 16 ஆம் தேதி போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, மாநில நிர்வாகிகள் சி.சந்திரகுமார், இரா.திருஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.