tamilnadu

விவசாயிகள் பெயரில் வங்கி கடன் மோசடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்கு

தஞ்சாவூர், செப்.7- திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் மோசடியாக கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக, ஆலை நிர்வா கம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி அளித்த புகாரின் அடிப்படை யில், காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விவ சாயிகளிடம் பல ஆண்டுகளாகப் பெற்ற கரும்புக்கு உரிய தொகையை வழங்கா மல், ஏமாற்றி வருவதாகவும், 30 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளதாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவைத் தொகையைத் தரு வதாகக் கூறி, ஆங்கிலத்தில் எழுதப் பட்ட தாளில் விவசாயிகளிடம் கை யொப்பம் பெற்று அதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்ப ரேசன் வங்கிகளிடம் வழங்கி விவசாயி கள் ஒவ்வொருவரின் பெயரிலும் 2 லட் சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை என மோசடியாக 350 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதையடுத்து வாங் காத கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சிய டைந்தார்.  இதையடுத்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் தலைமையில் விவ சாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகள் பெய ரில் மோசடி செய்த ஆலை நிர்வாகம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந் தித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மனுக்கள் அளிக்கப்பட்டன.  இந்நிலையில், தஞ்சாவூர் மாவட் டம், பாபநாசம் அடுத்த அரசலாற்றுப் படுகையை சேர்ந்த விவசாயி ராம கிருஷ்ணன், மாவட்ட குற்றபிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதில், ‘’ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து, திருஆரூரான் சர்க்கரை ஆலை க்கு கரும்பை வெட்டி அனுப்பி வைத்தேன். இந்நிலையில், கும்பகோ ணம் கார்ப்பரேஷன் வங்கியில் கடன் தொகையை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வங்கிலிருந்து 23 லட்சம் ரூபாய் பெற்ற கடன் தொகையும், அதற்கான வட்டி யாக மே 31-ம் வரை வட்டியுடன் சேர்ந்து 28,44,607 ரூபாய் கட்ட வேண்டும் என இருந்தது.  இந்நிலையில் மீண்டும் அதை வங்கியிலிருந்து 34,70 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்துமாறு நோட்டீஸ் வந்தது. இது தொடர்பாக விசாரித்த போது, 213 விவசாயிகள் பெயரில் இது போன்று மோசடியாக ஆலை நிர்வாகம் பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து திருஆரூ ரான் சர்க்கரை ஆலை உரிமையாளர், நிர்வாகிகள், கார்ப்பரேஷன் வங்கி நிர் வாகிகள் உள்ளிட்ட 9 பேர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்” என புகா ரில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்ப டையில், மோசடி செய்தல், ஏமாற்று தல், போலியாக ஆவணங்கள் தயா ரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இதற்கிடையே, 3 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட விவசாயி ஒரு வர் அளித்த புகாரின் பேரில் ஆலை அதிபர் ராம் தியாகராஜன் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பின் னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.