தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே மருதக்குடி ஊராட்சிக்குஉட்பட்ட அய்யாசாமிப் பட்டியில் கடந்த 30-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நாளன்று அங்குள்ள, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச் சீட்டுகள் உட்பட பலபொருட்களுடன் வந்திருந் தன. அய்யாச்சாமிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி எண் 205 அமைக்கப் பட்டிருந்தது.இந்த வாக்குச்சாவடியில் அங்குள்ள வார்டு எண் 7 மற்றும் வார்டு எண் 8 ஆகிய இரு வார்டுகளை சேர்ந்த வாக்காளர்கள், வாக்களிக்க இருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 30-ஆம் தேதி காலை தயாரான போது அந்த வாக்குச்சாவடியில் இருந்த வாக்குச் சீட்டுகள் வரிசை எண் 2931801- 2931850 முதலான 50 சீட்டுகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரியான ராமச்சந்திரன்,வல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் அங்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாயமான வாக்குச் சீட்டுகள் குறித்து, தேர்தல்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. இதுகுறித்து வல்லம் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வரு கின்றனர்.