tamilnadu

ஜன.8 தஞ்சையில் ஆட்டோக்கள் ஓடாது

தஞ்சாவூர், ஜன.1- தஞ்சை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டம், தஞ்சாவூர் ஏஐடியிசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  எல்.பி.எப் ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் என்.முருகானந்தம் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தின் மூலம் ஏற் பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் முன் வைக்கப்பட்டுள்ள 12 அம்ச கோரிக்கைக ளையும் விளக்கினார். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பறிக்கின்ற மோட்டார் வாகன திருத்த சட்டத்திற்கு எதிராகவும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி 8 அனைத்து ஆட்டோக் களையும் நிறுத்தி வேலைநிறுத்தத்தில் முழு மையாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. ஜன 3 ஆம் தேதி முதல் அனைத்து ஆட்டோ  ஸ்டாண்டுகளுக்கும் கூட்டாக சென்று, ஆட்டோக்களில் போஸ்டர் ஒட்டி பிரச்சா ரத்தில் ஈடுபடுவது, ஜன.8 அன்று பொது மக்கள் சொந்த வாகனங்களை பகல் மணி 12 முதல் 12.10 வரை நிறுத்தி சாலை போக்கு வரத்து முழுமையாக இயங்காமல் நிற்க  ஆதரவு கோருவதெனவும் முடிவெடுக்கப் பட்டது.