தஞ்சாவூர், ஜூன் 29- பேராவூரணியில் முடி திருத்துநர் மீது நட த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நூற்று க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்க ப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி லெட்சுமி விலாஸ் வங்கி அருகே, நியு நேச்சு ரல் லுக் என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருபவர் நாகேந்திர குமார் (30). ஞாயிற்றுக்கி ழமை மாலை, இவர் தனது கடையில் ஒரு பெண்ணின் குழந்தைக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சித்தாதிக்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் ஒரு வர் கடைக்குள் புகுந்து, ஏற்கனவே முடி வெட்டும் போது ஏற்பட்ட முன் விரோதம் கார ணமாக, நாகேந்திரகுமாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முடி வெட்டிக் கொண்டிருந்த குழந்தையும், தாயாரும் அல றியடித்து வெளியே ஓடினர். இதுகுறித்து நாகேந்திர குமார் பேராவூ ரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். இந்நிலையில் சலூன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, பேராவூரணி வட்டார மருத்துவர் (முடி திருத்துநர்) சங்கம் சார்பில், திங்கட்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.