கும்பகோணம், செப்.21- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் கோயில் அருகே தெற்கு மடவிளாகம் பகுதியில் ரோட்டில் எந்த நேரமும் மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சியார் கோவில் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் கோவில் தெற்குப் பகுதியில் உள்ள தெற்கு மடவிளாகம் பகுதியில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலை ஆக உள்ள சாலையை பொதுமக்கள் கோரிக்கை ஏதும் கேட்காமலேயே சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டது. அது கும்பகோணம் திருவாரூர் மெயின் ரோட்டின் மட்டத்திற்கு கீழ்பகுதியில் சிமெண்ட் சாலை போடப்பட்டதால் சரியாக மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது இப்பகுதியில் ஆலயத்திற்கு வருபவர்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் இடையூறாகவும் பள்ளி குழந்தைகள் தினந்தோறும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடந்து செல்வது சாக்கடை தண்ணீரில் ஊர்ந்து செல்வது போல் உள்ளது இது, பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்று தெரு காட்சியளிக்கிறது. இதனால் அங்கு குடியிருக்கும் தெரு வாசிகள் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிலர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் பார்வையிட்டு போதுமான நிதி இல்லை ஆகவே செய்ய முடியாது என கூறப்பட்டதாக தெரிகிறது ஆனால் இந்த நிலை நீடித்தால் நாச்சியார்கோவில் கிராமத்திற்கே கொசுக்கள் உற்பத்தியாகும் தெருவாக மாறிவிடும் என்று அங்குள்ள குடியிருப்புவாசிகள் கருதுகின்றனர். ஆகவே போர்க்கால அடிப்படையில் நாச்சியார் கோவில் தெற்கு மட வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு ரோட்டோரத்தில் சிறு வாய்க்கால் மூலம் தேங்கிக்கிடக்கும் மழை நீரை வெளியேற்றலாம். ஆனால் தற்போதைய நிர்வாகம் அது செய்ய மறுக்கிறது. இந்நிலை நீடித்தால் தெருவாசிகள் மற்றும் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.