கும்பகோணம், மே 16- ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து விவசாயம் செய்து மனித உயிர்களின் பசியைப் போக்கிட உழைத்த விவசாயிகளை பாராட்டும் நோக்கத்தோடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மே 14 அன்று விவசாயிகளுக்கு பாராட்டு எனும் நிகழ்வை நடத்திட வேண்டுமென அறைகூவல் விடுத்தது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவிடைமருதூர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் திருவிடைமருதூர் வேப்பத்தூர் உள்ளிட்ட விவசாயிகளை பாராட்டி கௌரவித்தனர். நிகழ்வில் சிஐடியு தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் சா. ஜீவபாரதி, விவசாயிகள் சங்க அமைப்பாளர் பக்கிரிசாமி, என்.பி.நாகேந்திரன், முருகேசன், சொக்கலிங்கம், மணி, கோபால், பாபு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.